பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் கடத்தல்; தாத்தா அதிர்ச்சி: தாயார் மீது சந்தேகம்

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் கடத்தல்; தாத்தா அதிர்ச்சி: தாயார் மீது சந்தேகம்

பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் விருதுநகர் அருகே அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் ரத்தினம்-ஜான்சிராணி தம்பதியினர். இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். கணவர் ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், ஜான்சிராணி மறுமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இச்சூழலில், தாய் ஜான்சிராணியுடன் செல்ல மறுத்த இரு குழந்தைகளும் வக்கனாங்குண்டில் உள்ள தாத்தா சுப்பையா வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் தாத்தா வீட்டில் இருந்து தினமும் பள்ளி செல்வது வழக்கம்.

மாலை நேரமாகியும் இரண்டு குழந்தைகளும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சுப்பையா காரியாபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் குழந்தைகள் இரண்டு பேரையும் கடத்தி சென்றது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தாயார் மீது காவல்துறையினரின் சந்தேகம் அடைந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in