மக்களவையில் காற்று வாங்கும் இருக்கைகள்
மக்களவையில் காற்று வாங்கும் இருக்கைகள்

மக்களவையில் சாதனை... 100% வருகை தந்த பாஜக எம்பிக்கள்; அதிக விவாதங்களில் பங்கேற்ற திமுக எம்பி

விடைபெறும் 17வது மக்களவையில் 100 சதவீத வருகையில் பாஜகவை சேர்ந்த நண்பர்களான 2 எம்பி-க்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஜனநாயக தேசத்தில் தங்களின் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத்துக்கு தொகுதி மக்கள் அனுப்பி வைக்கின்றனர். தொகுதி மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து அந்த அவைகளில் உரக்க குரல் எழுப்ப வேண்டியது அந்த மக்கள் பிரதிநிதிகளின் கடமை. தொகுதி பிரச்சினைக்கும் அப்பால், நாட்டின் நலம் நாடும் அம்சங்கள் அல்லது மக்கள் விரோத அறிவிப்புகள் ஆகியவற்றில் ஒட்டியோ,8 வெட்டியோ குரல் கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஆனால் நிதர்சனத்தில் இந்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை முறையாக செய்வதில்லை. அவையில் பெயருக்கு வருகை தந்துவிட்டு வெளியேறுவது, அவைக்கு வந்தும் அவசியமான விவாதங்களில் பங்கேற்காது இருப்பது, ஒட்டுமொத்தமாய் அவைக்கே வராது முழுக்கு போடுவது ஆகியவற்றை எல்லாம் நடத்துகிறார்கள். அப்படி விடைபெறும் 17வது மக்களவையில் 100 சதவீதம் வருகை தந்தவர்கள், அதிக விவாதங்களில் ஈடுபட்டோர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதன்படி மக்களவையின் ஒரு அமர்வையும் விடாது, பாஜகவைச் சேர்ந்த மோகன் மாண்டவி மற்றும் பகீரத் சவுத்ரி ஆகியோர் 100 சதவீதம் வருகையில் சாதனை புரிந்துள்ளனர். இந்த பாஜக எம்பிக்கள் இருவருமே முதல் முறையாக தேர்வானவர்கள் மற்றும் மக்களவையில் தற்செயலாய் அருகருகே இருக்கையை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக மக்களவை காற்று வாங்கியபோது கூட இருவரும் சிரத்தையுடன் அவை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இருவரில் மாண்டவி சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கர் தொகுதியை சேர்ந்தவர். சௌத்ரி ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியை சேர்ந்தவர்.

இதே போன்று மக்களவையில் அதிக விவாதங்களில் இடம்பெற்றவராக உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூரைச் சேர்ந்த பாஜக எம்பி புஷ்பேந்திர சிங் சண்டேல் சாதனை படைத்திருக்கிறார். இவர் 17வது மக்களவையில் 1,194 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். அடுத்தபடியாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த குல்தீப் ராய் சர்மா 833 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் மலூக் நகர்(582 விவாதங்கள்), தமிழகத்தின் தர்மபுரி தொகுதி திமுக எம்பியான செந்தில்குமார் (307 விவாதங்கள்) ஆகியோர் இடம் பிடிக்கின்றனர்.

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்
தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்

இவர்களுக்கு மாறாக மக்களவையின் எந்த விவாதங்களிலும் பங்கேற்காதவர்களில், பாலிவுட் நடிகர்களான சன்னி தியோல்(பாஜக) மற்றும் சத்ருகன் சின்ஹா(திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் பாஜக எம்பிக்களான ரமேஷ் ஜிகஜினகி, பிஎன் பச்சேகவுடா, பிரதான் பருவா, அனந்த் குமார் ஹெக்டே மற்றும் வி.ஸ்ரீனிவாச பிரசாத் ஆகியோரும் மக்களவையின் எந்த விவாதங்களிலும் பங்கேற்காது, பெயருக்கு வந்து சென்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in