கணவர் வீட்டில் இல்லாத நேரம்; உளியால் பெண் பைனான்சியர் கழுத்தை அறுத்துக் கொலை: இருவர் கைது

 பெண் பைனான்சியரை கொலை செய்த கொலையாளிகள்
பெண் பைனான்சியரை கொலை செய்த கொலையாளிகள்கணவர் வீட்டில் இல்லாத நேரம்; உளியால் பெண் பைனான்சியர் கழுத்தை அறுத்துக் கொலை: இருவர் கைது

கோவையில் பெண்ணின் கழுத்தை உளியால் அறுத்து கொலை செய்த குற்றவாளிகள் இருவரை போலீஸார் செய்துள்ளனர். அவர்களை விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கரையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தங்கமணி(56) பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று மாலை சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் தனியாக இருந்த தங்கமணி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர விசாரணையில், கொலையான பெண்ணின் உறவினரான எல்லைபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (29) மற்றும் அவரது நண்பர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற வேங்கை சுதாகர்(30) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கமணியை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு சுப்பிரமணியன் மனைவி தங்கமணியிடம் கன்னியப்பன் 5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை அடைக்க முடியாமல் கன்னியப்பன், அவரது நண்பர் சுதாகருடன் சேர்ந்து தங்கமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சுப்பிரமணியன் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் சேர்ந்து உளியால் தங்கமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கொலையாளிகளை 12 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்ததை மாவட்ட காவல்துறை நிர்வாகம் பாராட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in