தமிழகத்தை வலம் வர 'டிவிஎஸ் 50' போதும்: அசத்தும் திருச்சி இளைஞர்கள்

தமிழகத்தை வலம் வர 'டிவிஎஸ் 50' போதும்:  அசத்தும் திருச்சி இளைஞர்கள்

திருச்சியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் 'டிவிஎஸ் 50' வாகனங்களில் தமிழகத்தைச் சுற்றி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன், ஜீவா, சந்தோஷ். நண்பர்களான இவர்கள் மூவரும் 'டிவிஎஸ் 50' வாகனத்தில் தமிழகத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் சுற்றி வருகின்றனர்.

இதுகுகுறித்து அவர்கள் கூறுகையில், " டிவிஎஸ் 50 சத்தம் எங்களுக்குப் பிடிக்கும் என்பதால் இந்த வாகனத்தை எங்களுக்குப் பிடிக்கும். அதனால் தமிழகத்தில் முதற்கட்டமாக மலைப்பாங்கான பகுதிகளில் இந்த வாகனத்தில் சுற்றி வரத்திட்டமிட்டு பச்சைமலை, கொல்லிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் நாங்கள் சென்றுள்ளோம். வழியில் வாகனம் பழுதானால் நாங்களே அதை சரி செய்து கொள்வோம். இந்த வண்டியின் பொருட்கள் எளிதில் கிடைப்பதால், பழுதான உடனே சரி செய்யவும் முடிகிறது. இந்த வண்டிகளின் சத்தத்தைக் கேட்டு பலர் விலைக்குக் கேட்டார்கள். நாங்கள் தர மறுத்து விட்டோம். எஞ்சின் சத்தம் கேட்பதற்காக 8 ஆயிரம் ரூபாயைச் செலவு செய்துள்ளோம்" என்றனர். இவர்கள் மூவரும் தங்கள் வண்டிகளில் தங்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளனர்.

ஞானப்பழம் பெற மயில் ஏறி உலகம் சுற்றச் சென்ற முருகனின் திருவிளையாடல் போல, வாகனத்தின் சத்தம் நன்றாக இருக்கிறது என்பதற்காக 'டிவிஎஸ் 50' வாகனத்தில் தமிழகத்தைச் சுற்றி வரும் இந்த இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in