துருக்கி நிலநடுக்கம் - டிராக்டர் உதிரிபாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும்: தொழில்முனைவோர் அச்சம்

கோவை கொடிசியா முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு
கோவை கொடிசியா முன்னாள் தலைவர் ரமேஷ் பாபுதுருக்கி நிலநடுக்கம் - டிராக்டர் உதிரிபாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும்

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய டிராக்டர் உதிரிபாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும் என்றும், வர்த்தக பாதிப்பால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்றும் தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து துருக்கிக்கு இன்ஜினியரிங் பொருட்கள், டிராக்டர் உதிரி பாகங்கள் பெருமளவில் அனுப்படுகின்றன. ஆடைகள் ஏற்றுமதி குறைந்த அளவில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. துருக்கி இந்நிலையில் இருந்து மீண்டு வரும் வரை இன்ஜினியரிங் பொருட்கள், டிராக்டர் உதிரி பாகங்கள் போன்றவைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

இதுகுறித்து கோவை கொடிசியா முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில்," ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது துருக்கியின் துயரம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து இன்ஜினியரிங் பொருட்கள், டிராக்டர் உதிரி பாகங்கள் போன்றவைகள் ஏற்றுமதி பாதிக்கும். அதே போல் துருக்கியுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள், அந்நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் என ஒன்று தொட்டு ஒன்று வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகும். இந்தியாவில் இதன் பாதிப்பால் வேலைவாய்ப்புகள் கூட குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in