திருப்பதி தேவஸ்தானம் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு: காரணம் என்ன?

திருப்பதி தேவஸ்தானம் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு: காரணம் என்ன?

திருமலை தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு கண்டிருப்பதற்கு, ஆந்திர மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆன்மிக தலத்தை வணிக நோக்குடன் செயல்படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு திருமலைக்கு செல்வோர் அதிகம். அந்த வகையில் ஜன.12 முதல் மாத இறுதி வரையிலான சிறப்பு தரிசன முன்பதிவு ஆன்லைனில் இன்று(ஜன.9) தொடங்கியுள்ளது. இதனையொட்டி தங்கும் விடுதிகள் கடும் கட்டண உயர்வு கண்டிருப்பது தொடர்பாக பக்தர்கள் மத்தியில் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது நாடெங்கிலும் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களை பாதிக்கும் என்று மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலுள்ள பல்வேறு மட்டங்களிலான தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. சில விருந்தினர் அறைகள் பத்து மடங்கு வரை கட்டண உயர்வு கண்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ’ஒரு ஆன்மிக தலத்தை சேவை நோக்கோடு செயல்படுத்தாது வணிகம் ஈட்டும் மையமாக திருமலை தேவஸ்தானம் மாற்றி வருவதாகவும்’ பாஜக மாநில தலைவர் சோமு வீர்ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவஸ்தானம் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில், “சில தங்கும் விடுதிகளில் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சில விடுதிகளில் ஏ.சி., கீசர், மாடுலர் கிச்சன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன வசதிகளுக்கு ஏற்பவே புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செழிப்பானவர்களுக்காக செய்யப்படும் நவீன வசதிகள் அதையொட்டி உயர்த்தப்பட்ட விடுதி கட்டணங்கள், ஆகியவற்றினூடே சாமானியர்களுக்கான விடுதி கட்டணங்களும் உயர்வு கண்டிருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in