என்னைச் சுட்டுக் கொல்லப் பார்க்குறது நியாயம் இல்லைங்க: கதறும் பிரபல ரவுடியின் வீடியோ வைரல்

கோவையின் பிரபல ரவுடி  கௌதம்.
கோவையின் பிரபல ரவுடி கௌதம்.என்னைச் சுட்டுக் கொல்லப் பார்க்குறது நியாயம் இல்லைங்க: கதறும் பிரபல ரவுடியின் வீடியோ வைரல்

"நான் கோட்டில் சரண்டராகி ஜெயிலுக்குப் போனாலும் போலீஸ்காரங்க என்னைச் சுட்டுக் கொல்லப்போறாங்க. என்னைச் சுட்டுக்கொல்லப்பார்க்குறது நியாயம் இல்லைங்க" என கோவையைச் சேர்ந்த பிரபல ரவுடி கௌதம் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை ஆர் எஸ் புரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (28). பிரபல ரவுடியான இவர் மீது கோவை நகரில் 15-க்கு மேற்பட்ட அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடி கௌதம் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், " என் மேல் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கு.‌ எனக்கு அப்பா, அம்மா கிடையாது. எட்டு வருஷத்திற்கு முன்னாடி நான் குற்றம் செய்திருந்தேன்.‌ கல்யாணத்துக்கு அப்புறம் நான்கு வருஷமாக எந்த விவகாரத்திலையும் ஈடுபடலை.

எனக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கு.‌ என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். என் வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் மனைவியின் பெற்றோர் வீட்டில் அவரை விட்டிருந்தேன். இந்த நிலைமையில் என் மனைவி, மாமியார், அவரது சகோதரி மீது போலீஸார் கஞ்சா கேஸ் போட்டு இருக்காங்க. என்னைப் பிடிக்கணும், என்கவுன்டர் பண்ணனும் என போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பேசிக்கிறாங்க.‌

என் மேல 7 வழக்குகளில் வாரண்ட் இருக்குது.‌ இதுக்காக என்னைச் சுட்டுக்கொல்லப் பாக்குறது நியாயம் இல்லைங்க.‌ நான் இப்ப திருந்தி வாழப் பார்க்கிறேன். ஆனால், காமராஜபுரம் கௌதம் ஆளுங்க அப்படின்னு சொல்லி 50 பேர் மேல வழக்குப் போட்டு இருக்காங்க. நான் கோர்ட்ல சரண்டராகி ஜெயிலுக்குப் போனாலும், என்ன போலீஸ்காரங்க சுட்டுக் கொல்லப் போறோம், அப்படின்னு பேசிக்கிறாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.‌

என்னோட செல்போன்ல ரத்தினபுரி, சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் தொடர்பு கொண்டு பேசினாங்க. கோர்ட்ல போய் சரண்டர் ஆகி விடு, இல்லாவிட்டால் சுட்டுப் பிடிக்க வேண்டி இருக்கும்னு சொல்றாங்க’’ என்று அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வருவதால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in