அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டிரக் - கார்: துண்டு துண்டான 9 பேரின் உடல்கள்!

அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டிரக் - கார்: துண்டு துண்டான 9 பேரின் உடல்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார், டிரக் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 4 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை நோக்கி டிரக் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள குஹாகர் நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மாங்கன் அருகே நெடுஞ்சாலையில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் மீட்புப்படையில் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் ஐந்து ஆண்களும், 4 பெண்களும் உயிரிழந்தனர். வாகனங்களில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இரும்பு கட்டர்கள் மூலம் வாகனங்களைப் பிரித்து உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் மாங்கன் உபாசிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதே போல சிந்துதுர்க் மாவட்டம் கன்காவலியிலும் இன்று மற்றொரு விபத்து நடந்தது. இதில் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in