பட்டாசு வெடித்து கொண்டாடிய டிஆர்எஸ் தொண்டர்கள்; தீப்பிடித்து எரிந்த ஆட்டோ டிரைவர்: நடந்தது என்ன?

பட்டாசு வெடித்து கொண்டாடிய டிஆர்எஸ் தொண்டர்கள்; தீப்பிடித்து எரிந்த ஆட்டோ டிரைவர்: நடந்தது என்ன?

தெலங்கானாவில் 8 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை பட்டாசு வெடித்து டிஆர்எஸ் தொண்டர்கள் கொண்டாடினர். அப்போது வெடித்த பட்டாசு பற்றி ஆட்டோ ஓட்டுநர் உடல் கருகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். இதை மாநிலம் முழுவதும் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் (டிஆர்எஸ்) தொண்டர்கள் கொண்டாடினர்.

இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் உள்ள சங்கரரெட்டி பகுதியில் டிஆர்எஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது, பட்டாசு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் மீது பற்றி தீப்பிடித்தது. இதைப்பார்த்த டிஆர்எஸ் தொண்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆட்டோ ஓட்டுநர் மீது பட்டாசு வெடித்து தீப்பிடித்து எரியும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in