சர்ச்சை பேச்சு... பாஜக எம்எல்ஏக்களுடன் முரண்பாடு: திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா

சர்ச்சை பேச்சு... பாஜக எம்எல்ஏக்களுடன் முரண்பாடு: திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா

கட்சி எம்எல்ஏக்களுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

திரிபுரா மாநில இளம் முதல்வராக இருந்தவர் பிப்லப் குமார் தேவ். பாஜக ஆளும் மாநிலங்களில் மிகவும் சிறிய மாநிலம் திரிபுரா. இவர் அண்மையில் சில சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளார். அதோடு, சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வந்துள்ளார். இது ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதனிடையே, முதல்வராக பிப்லப் குமார் தேவ் தொடரக்கூடாது என சில அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, அவரை மாற்ற கட்சித் தலைமை முடிவெடித்துள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்மையில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் சந்தித்து தன்னுடைய விளக்கத்தை கூறியதாக தெரிகிறது.

பாஜக எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை இன்று தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் பார்வையாளராக திரிபுரா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் சுமுகமாக புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பார் என்று தெரிகிறது.

பிப்லப் குமார் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வந்தால் மக்களின் செல்வாக்கை பாஜக இழக்க நேரிடும் என்றும் அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.