ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்... திரிணாமுல் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை

வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
வாகனங்கள் தீ வைத்து எரிப்புஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்... திரிணாமுல் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை

மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிபஞ்சாயத்து தலைவர், 12 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மக்ரஹாத் 2வது பிளாக்கின் அர்ஜுன்பூரைச் சேர்ந்தவர் மைமூர் கராமி. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பஞ்சாயத்து தலைவராக மைமூர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று நள்ளிரவு டைமண்ட் ஹார்பர் அருகே வீட்டிற்கு அவரது நண்பர் ஷாஜகான் மொல்லாவுடன் மைமூர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் மைமூரைத் துப்பாக்கியால் சுட்டது. இதன் பின் அவரைச் சுற்றி வளைத்து வாள், அரிவாளால் அந்தக்கும்பல் சரமாரியாக வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற மொல்லாவும் படுகாயமடைந்தார்.

இதையடுத்து காயமடைந்த அவர்கள் இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மைமூர் கராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அதேசமயம் மொல்லாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தகவல் அறிந்ததும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர்.

அப்பகுதியில் நின்ற வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையொட்டி அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இக்கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கமாநிலத்தில் சமீபத்தில் முடிவடைந்த பஞ்சாயத்து தேர்தலுடன் தொடர்புடைய வன்முறையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in