மகாபஞ்சமி விழாவில் அட்டகாசமாக நடனமாடிய திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி - வைரல் வீடியோ

மகாபஞ்சமி விழாவில் அட்டகாசமாக நடனமாடிய திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி - வைரல் வீடியோ

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, நாடியாவில் நடந்த மகாபஞ்சமி விழாவில் பெங்காலி பாடலுக்கு பெண்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்கத்தில் உள்ள நாடியாவில் நடந்த மகாபஞ்சமி விழா ஊர்வலத்தில் பெண்களுடன் நடனமாடும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் பெங்காலி நாட்டுப்புறப் பாடலில் மற்ற பெண்களுடன் சேர்ந்து தெருவில் நடனமாடியபடியே நடந்து செல்கிறார்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படும் மகாபஞ்சமி, துர்கா தேவியின் ஐந்தாவது அவதாரத்தை பக்தர்கள் வழிபடும் நிகழ்வாக அமைந்துள்ளது.

சமீபத்தில் காளிதேவி வழிபாட்டு முறைகளைப் பற்றிப் பேசியதற்காக சர்ச்சையில் சிக்கினார் மஹுவா மொய்த்ரா. அதில் அவர், "என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபித் கோயிலுக்குச் சென்றால். சாதுக்கள் புகைபிடிப்பதை காணலாம். அதுதான் காளி மக்கள் வழிபடும் முறை. இந்து மதத்தில், காளி வழிபாட்டாளரான எனக்கு, காளியை அப்படிக் கற்பனை செய்ய உரிமை உண்டு; அதுவே எனது சுதந்திரம்” என தெரிவித்திருந்தார். இதற்காக பாஜக இவரை கடுமையாக விமர்சனம் செய்தது. இதற்கு பதிலளித்த அவர், "உங்கள் கடவுளை சைவமாகவும், வெள்ளை ஆடையாகவும் வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவு இறைச்சி உண்ணும் தெய்வத்தை கற்பனை செய்ய எனக்கு சுதந்திரம் உள்ளது" என்று தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in