செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 389 கிராம் தங்கம்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 389 கிராம் தங்கம்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிலான  தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு  துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, அதில் பயணித்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்  தீவிர சோதனை செய்தனர்.  அப்போது, ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். ஆனாலும் அவரிடமிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில் அவரது செருப்பில் வித்தியாசத்தை உணர்ந்த அதிகாரிகள் அதனை தீவிரமாக சோதனை செய்தனர்.  சோதனையில் செருப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.21 லட்சத்து 83 ஆயிரத்து 457 மதிப்புள்ள,  389 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.  அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். செருப்பில்  மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ள சம்பவம் திருச்சி  விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in