பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் கொல்லப்பட்ட தொழிலாளர்கள்: நினைவிடத்தில் அஞ்சலி

பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் கொல்லப்பட்ட தொழிலாளர்கள்: நினைவிடத்தில் அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகில்  திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1982 ஜனவரி 19 அன்று ‌விடுதலை இந்தியாவில்  முதல் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் ஒருமித்த தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களும்  வேலைநிறுத்தம் செய்தனர்.  பல இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.   

சாலைமறியல் செய்த மாபெரும் குற்றத்திற்காக அன்றைய அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் திருக்கடையூர் அருகே நடைபெற்ற சாலைமறியலில் திருமெய்ஞானம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் அஞ்சான், நாகூரான் ஆகியோர்  துப்பாக்கி கொண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

இதே போல மன்னார்குடி அருகில் இரட்டைபுளி கிராமத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஞானசேகரன் என்பவர் இறந்தார்.  இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் கொல்லப்பட்டனர். அதனால் ஜனவரி 19-ம் தேதியை தியாகிகள் தினமாக  தொழிலாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நாளில் போராட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவிடங்களில்   அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகில்  திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in