ட்விட்டரில் திடீரென ட்ரெண்டாகும் '#WeWantGroup4Results'

டிஎன்பிஎஸ்சி தேர்வு
டிஎன்பிஎஸ்சி தேர்வுட்விட்டரில் திடீரென ட்ரெண்டாகும் '#WeWantGroup4Results'

கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்விட்டரில் #WeWantGroup4Results ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 18,36,535 பேர் எழுதி இருந்தனர். கடந்த காலங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள்ளாக வெளியிடப்படும். ஆனால், தேர்வு முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகதாது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது. அந்த விளக்கத்தில், ‘’ மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பிழைகளைக் கணினி மூலம் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் நேரடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எந்தவிதமான முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் குரூப் 4 முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்’’ என அறிவித்துள்ளது.

தேர்வு முறைகளில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், தேர்வர்கள் எதிர்வரும் வாழ்க்கை பயணங்களுக்குத் தாங்களாக தயார் செய்து கொள்ள, நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து ட்விட்டரில் #WeWantGroup4Results ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in