இம்ரான் கானின் கட்சியை பயங்கரவாத அமைப்பாக கருதவேண்டும்: நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவேசம்

மரியம் நவாஸ் ஷெரீப்
மரியம் நவாஸ் ஷெரீப்இம்ரான் கானின் கட்சியை பயங்கரவாத அமைப்பாக கருதவேண்டும் : நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவேசம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை பயங்கரவாத அமைப்பாக கருதுமாறு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் ஷெரீப் கோரிக்கை வைத்துள்ளார்.

லாகூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், "தடைசெய்யப்பட்ட அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளை அரசு, அரசு எப்படி கையாள்கிறதோ, அதே வழியில் இம்ரான் கானையும் கையாள வேண்டும். பிடிஐ-யை அரசியல் கட்சியாக நினைத்து கையாள்வது முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகளை கையாள்வது போலவே அரசாங்கம் அவர்களையும் கையாள வேண்டும்.

பயங்கரவாதத்தை செயல்படுத்த திட்டமிட்டால் பயங்கரவாதிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் குகைகளில் ஒளிந்துகொண்டு அங்கிருந்து கட்டளைகளை அனுப்புவார்கள். அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களை எப்போதுமே அரசியல் தலைவர்கள் முன்னணியில் இருந்து வழிநடத்துவார்கள். பயங்கரவாத அமைப்புகளுக்கு மட்டுமே "ஒரு குகையிலிருந்து" உத்தரவுகள் வழங்கப்படும். அதேபோல இம்ரான் கானும் தனது ஜமான் பூங்கா இல்லத்தில் பதுங்கியிருக்கிறார்" என்று அவர் கூறினார்.

தோஷகானா வழக்கில் மார்ச் 7 அன்று, இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்து, மார்ச் 13ல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. செவ்வாய்கிழமை விசாரணையின் தொடக்கத்தில், இம்ரானின் வழக்கறிஞர் கவாஜா ஹரிஸ் தனது கட்சிக்காரர் ஆஜராக முடியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். "அவர் ஆஜராக மறுக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர் ஆஜராக முடியாது" என்று கூறினார். இந்த சூழலில் இம்ரான் கான் கைது செய்யப்படாமல் தடுக்க நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது ஜமான் பார்க் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் போலீஸ் படை ஜமான் பூங்காவில் உள்ள இம்ரான் கானின் வீட்டிற்குச் சென்றது, அதன் பிறகு பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in