டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன்: லைவ் அப்டேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

புல்லட் ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின்
புல்லட் ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின்டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன்: லைவ் அப்டேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

ஜப்பான் போல வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 8 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானில் உள்ள ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புல்லட் ரயிலில் இன்று பயணம் செய்தார்.

அதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அதில், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன். 500 கி.மீ தூரத்தை 2.5 மணி நேரத்தில் அடைந்துவிடுவோம் உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in