பேருந்தில் தூங்கியவர் கண் விழிக்கவில்லை: ஊழியர் இறந்து கிடந்ததைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சி

பேருந்தில் தூங்கியவர் கண் விழிக்கவில்லை: ஊழியர் இறந்து கிடந்ததைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சி

கன்னியாகுமரியில் அரசுப் பேருந்தில் இரவு படுத்துத் தூங்கிய போக்குவரத்துக் கழக ஊழியர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பினால் உயிர் இழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ்(58). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக இருந்தார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மாற்றுப்பணி வேண்டி விண்ணப்பித்து இருந்தார். அதன் அடிப்படையில் ஏசுதாஸிற்கு மெக்கானிக் உதவியாளர் பணிவாய்ப்பு வழங்கப்பட்டது.

ஏசுதாஸ் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் கன்னியாகுமரி பணிமனையிலும் முன்னாள் தலைவராக இருந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணிக்குவந்த ஏசுதாஸ் இன்று காலையில் வீடு திரும்பவில்லை. கன்னியாகுமரி டிப்போவில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து ஒன்றில் இரவு ஏறி தூங்கியவர் கண் விழிக்கவில்லை. பேருந்தை எடுக்க வரும்போதே இது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த கன்னியாகுமரி போலீஸார் ஏசுதாஸ் உடலைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in