
தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையின் முன்பு மதுபோதையில் திருநங்கைகளின் மடியில் படுத்தபடி சில்மிஷத்தில் ஈடுபடும் குடிமகனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளை கோழிவிளை பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுவாங்க வரும் குடிமகன்கள் மது வாங்கியபின் சாலைகளின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடிக்கின்றனர். தொடர்ந்து போதை தலைக்கேறிய பின் ஒருசிலர் அங்கேயே படுத்து தூங்கவும் செய்கின்றனர்.
அதில் ஒருசில குடிமகன்கள் அங்கு மது அருந்த வரும் திருநங்கைகளின் மடியில் படுத்து சில்மிஷத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநங்கை ஒருவரின் மடியில் படுத்திருக்கும் நபரை மற்றொரு நபர் தாக்கி சாக்கடையில் தள்ளிவிட்டு இருவரும் கற்களை கொண்டு மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீஸார் கண்டு கொள்ளாமல் இருப்பதே இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற காரணம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.