அதிர்ச்சி! திருமணத்துக்காக திருநங்கையாக மாறிய ஆசிரியர்... சர்ஜரி முடிந்ததும் காதலன் எஸ்கேப்!

அதிர்ச்சி! திருமணத்துக்காக திருநங்கையாக மாறிய ஆசிரியர்... சர்ஜரி முடிந்ததும் காதலன் எஸ்கேப்!

ஆந்திராவில் ஓரினச்சேர்க்கை காதலனுக்காக திருநங்கையாக ஆசிரியர் மாறிய நிலையில், காதலன் தலைமறைவானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜயவாடாவில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2019ம் ஆண்டு ஆலோகம் பவன், நாகேஸ்வரராவ் ஆகியோர் பிஎட் படித்தனர். அப்போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்து வந்துள்ளனர். பின்னர், கிருஷ்ணலங்காவில் டியூசன் சென்டர் நடத்தி வந்த போது, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்தனர். அதற்கு வசதியாக, பவனை டெல்லிக்கு அழைத்து சென்ற நாகேஸ்வரராவ் அங்கு அவருக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்து வைத்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின் பவன் தன்னுடைய பெயரை பிரம்மராம்பா என்று மாற்றி கொண்டு திருமண ஆசையுடன் ஊர் திரும்பினார். ஆனால் நாகேஸ்வர ராவ் திருமணத்திற்கு மறுத்து தலைமறைவாகி விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் பவன் புகார் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in