திருமணம் செய்து கைவிட்ட வாலிபர் வீட்டின் முன் போராட்டம்: திருநங்கையால் பரபரப்பு

திருநங்கை ஸ்ரீநிதி.
திருநங்கை ஸ்ரீநிதி.

திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபரின் வீட்டின் முன்பு திருநங்கை போராட்டம் நடத்தியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு கீழச்சின்னனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி(33). திருநங்கையான இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் அருள்வாக்கும் சொல்லி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக்(எ) தங்கதுரை (33) கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பூசாரியாக இருந்த திருநங்கை ஸ்ரீநிதிக்கும், தங்கதுரைக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதே கோயிலில் தங்கதுரையும் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.

தங்கதுரை.
தங்கதுரை.

மேலும் ஸ்ரீநிதிக்கு கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இதையறிந்த தங்கதுரை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தங்கதுரைக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். பெற்றோரின் பிடிவாதத்திற்காக தான் திருமணம் செயது கொள்வதாகவும், ஒரு மாதத்தில் மீண்டும் உன்னிடம் வந்துமு விடுகிறேன் என்று ஸ்ரீநிதியுடன் வாக்குறுதி தந்தார். இதற்கு ஸ்ரீநிதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தங்கதுரைக்கு திருமணம் நடைபெற்றது. இதன் பின் ஸ்ரீநிதியிடனான தொடர்பை அவர் துண்டித்துள்ளார். அவரை தொடர்பு கொள்ள ஸ்ரீநிதி முயற்சி செய்த போதும், அவரை ஒரு மாதமாக தங்கதுரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கதுரை வீட்டின் முன்பு கையில் தாலியுடன் ஸ்ரீநிதி இன்று அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றிய தங்கதுரை வந்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டுச் செல்வேன் என்று ஸ்ரீநிதி கூறியுள்ளார். தகவல் அறிந்து வந்த பாலமேடு போலீஸார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனுப்பி வைத்தனர். மீண்டும் மாலையில் தங்கதுரை வீட்டின் முன் ஸ்ரீதி அமர்ந்து போராட்டம் நடத்தினார். தங்கதுரை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதையடுத்து ஸ்ரீநிதி அங்கிருந்து சென்றார். ஏற்கெனவே ஸ்ரீநிதி அளித்த புகாரின் பேரில் தங்கதுரை மீது மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in