`இரவில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை'- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் தர்ணா

ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகள்
ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகள்

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்ட திருநங்கைகள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கூரைநாடு ஹாஜியார் நகர் பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படாத நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாஜியார் நகர் பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாகவும், வேறு பகுதிகளுக்கு செல்லலாம் என்றால் வாடகைக்கு யாரும் வீடு தருவதில்லை எனவும் கூறும் இந்த திருநங்கைகள், தங்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in