போலீஸ் ஸ்டேனுக்குள் புகுந்து தகராறு செய்த திருநங்கை: வைரலாகும் வீடியோ

போலீஸ் ஸ்டேனுக்குள்  புகுந்து தகராறு செய்த திருநங்கை: வைரலாகும் வீடியோ

சென்னையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து திருநங்கை ஒருவர் தகராறு செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்திற்குள் புகுந்த திருநங்கை ஒருவர் தகராறு செய்துள்ளார். அத்துடன் அங்கிருந்த காவலர்களை ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்த காட்சிகளை அங்கிருந்த காவலர் ஒருவர், செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," சென்னை பாண்டிபஜார் பகுதியில் வசித்து வந்த இந்த திருநங்கையின் டூவீலரின் பதிவு எண் ஜி என ஆரம்பிக்கம் வகையில் இருந்தது. அரசு வாகனங்களுக்கு மட்டுமே பதிவு எண் ஜி என்று ஆரம்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை திருநங்கையிடம் நாங்கள் எச்சரித்தோம். ஆனால், அவர் அதைக்கேட்கவில்லை. இந்த நிலையில் திருநங்கையின் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தோம். இதனால், காவல் நிலையத்திற்கு வந்த திருநங்கை ஆபாசமாக பேசியுள்ளார்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in