ஒரே நாளில் 56 துணை ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

ஒரே நாளில்  56  துணை ஆட்சியர்கள் இடமாற்றம்:  தமிழக அரசு அதிரடி

தமிழகம் முழுவதும் 56 துணை ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 56 துணை ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜயந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிமைப்பணியின் கீழ் பல்வேறு துறைகளில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரக்கூடிய 56 நபர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் அலுவலர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், முத்திரைத்தாள் தனித்தனி ஆட்சியர், முகர்ப்போர் வாணிப கழகம், வருவாய் கோட்டாட்சியர் போன்ற வருவாய்துறையின் கீழ் வரக்கூடிய துணை ஆட்சியர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக சோ.பல்துறை நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் கலால்துறை உதவி ஆணையராக ராம்குமார் மாற்றப்பட்டுள்ளார். இதுபோன்று வெவ்வேறு நிலையில் உள்ள 56 பேருக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in