அமெரிக்காவில் சிகிச்சை நிறைவு... குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கிறார் டி.ராஜேந்தர்!

அமெரிக்காவில் சிகிச்சை நிறைவு... குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கிறார் டி.ராஜேந்தர்!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். அவருடன் அவரது மகன்கள் சிலம்பரசன் மற்றும் குறளரசன், மகள் இலக்கியாவின் மகன் சேஷன் ஆகியோர் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நடிகர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவர் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்றார்.

அமெரிக்கா செல்லும் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி ராஜேந்தர், " என் உடல்நலன் குறித்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், பாரிவேந்தர், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு என் நன்றி. நான் எதையும் மறைத்தது கிடையாது. மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. ஆனால் அதே நேரத்தில் என்னதான் பிரார்த்தனை செய்தாலும் விதி என்று ஒன்று இருக்கிறது. அந்த விதியைத் தாண்டி எதுவும் நடக்காது. எனது மகன் சிலம்பரசனுக்காகத்தான் நான் அமெரிக்கா சொல்கிறேன்" என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in