உஷார்... இன்று இந்த விரைவு ரயில்கள் ரத்து... புறப்படும் நேரத்திலும் மாற்றம்!

ரயில் நேரங்களில்  மாற்றம்
ரயில் நேரங்களில் மாற்றம்

திருநெல்வேலி ரயில்வே யார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் பால பராமரிப்பு பணி காரணமாக இன்று 09-08-23 ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வ.எண்.06675) இன்று (09.08.2023) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் (வ.எண்.06680) இன்று (09.08.2023) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் நாகர்கோவில் - தாம்பரம் வரை செல்லக்கூடிய அந்தோத்யா சிறப்பு விரைவு ரயில் (வ.எண்.20692) இன்று (09.08.2023) நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகரில் இருந்து புறப்படும்.

பாலக்காடு சந்திப்பு  - திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயிலானது (வ.எண்.16731) இன்று (09.08.2023) பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல் திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு செல்லக்கூடிய விரைவு ரயிலானது (வ.எண்.16732) இன்று (09.08.2023) திருச்செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.

இவை தவிர திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லக்கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது (வ.எண்.06409) இன்று (09.08.2023) மாலை 4.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 6.00 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in