ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்: 2 கி.மீ உடல் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்: 2 கி.மீ உடல் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலோடு ரயில் சிறிதுதூரம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தெரியவந்ததும் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

கோவை சோமனூர் ரயில் நிலையம் அருகே சேடபாளையம் ரோடு பகுதியில் எர்ணாகுளம்- பெங்களூர் அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்ததிடீர் என நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயிலின் முன்பகுதியில் இளைஞர் உடல் ஒன்று தொங்கிய நிலையில் இருந்ததால் விசாரணைக்காக ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகளும், சாலையில் நின்று கொண்டிருந்த மக்களும் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், சோமனூர் ரயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கதக்க இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ரயிலின் முன்பகுதியில் சிக்கி கொண்டது. ரயில் அந்த உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. உடலை மீட்கவும், விசாரணைக்காகவும் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது " என்றனர். இச்சம்பவம் அந்த ரயில் வழித்தடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in