அடுத்த அதிர்ச்சி… கேரளாவில் ரயில் தடம் புரண்டு விபத்து!

அடுத்த அதிர்ச்சி… கேரளாவில் ரயில் தடம் புரண்டு விபத்து!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

நாடு முழுவதும் ரயில் விபத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ரயில்வே துறையில் போதிய பணியாளர்கள் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. தொடரும் ரயில் விபத்துகளால் பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து, பீகார் ரயில் விபத்து, அதைத்தொடர்ந்து அண்மையில் ஆந்திரா ரயில் விபத்து என தொடர்ந்து விபத்து நிகழ்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கேரள மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நிலாம்பூர் சாலை - ஷோரனூர் விரைவு ரயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று பாலக்காடு ரயில்வே பிரிவு அளித்த தகவலின்படி தெரியவந்துள்ளது. காயமடைந்த பயணிகள் குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவு ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் வரக்கூடிய ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in