பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மதுரை - செங்கோட்டை ரயில்கள் 6 நாட்கள் ரத்து!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மதுரை - செங்கோட்டை ரயில்கள் 6 நாட்கள்  ரத்து!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரிவில் ரயில் பாதையைப் பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வரும் செப்டம்பர் 10-ம் தேதி வரை 6 நாள்களுக்குச் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பாதையைப் பலப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்படும்.

அதுபோல் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in