செல்போனில் சார்ஜ் போட்ட வாலிபர்: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம்: இரவில் நடந்த விபரீதம்

செல்போனில் சார்ஜ் போட்ட வாலிபர்: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பரிதாபம்: இரவில் நடந்த விபரீதம்

செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதில் மின்சாரம் பாய்ந்து வடமாநிலக் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக்(27). இவர் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள பழைய இரும்பு சாமான்கள் வாங்கும் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார். இவரோடு ஒடிசாவைச் சேர்ந்த மேலும் மூவர் பணிசெய்து வந்தனர். இந்த நான்குபேரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு அறை எடுத்துத் தங்கிவந்தனர்.

தீபக் நேற்று இரவு பழைய இரும்புக்கடையில் வேலையை முடித்துவிட்டு தூங்க வந்தார். அப்போது அங்கிருந்த மின்பெட்டி ஒன்றில் இருந்து தான் படுத்திருந்த கட்டில் வரை மின் இணைப்பை வயர் மூலம் இணைத்து சார்ஜ் போட முயன்றார். இதில் மின்பெட்டியில் இருந்து கொண்டுவந்த வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தீபக் தூக்கிவீசப்பட்டார். அவரது நண்பர்கள் அவரை உடனடியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடந்து தீபக்கின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒடிசாவில் இருந்து அவரது உறவினர்களும் நாகர்கோவில் வருகின்றனர்.

செல்போனில் சார்ஜ் போட்ட வடமாநிலத் தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in