பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பாய்லர்; உடலில் கொட்டிய கொதிநீர்: பறிபோன ஊழியரின் உயிர்

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பாய்லர்; உடலில் கொட்டிய கொதிநீர்: பறிபோன ஊழியரின் உயிர்

தனியார் நிறுவனத்தில் பால்கோவா தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர், தயாரிப்புப் பணியின் போது பாய்லர் வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையத்தில் தனியார் பால் பொருள்கள் உற்பத்திக்கூடம் ஒன்று உள்ளது. கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன்(70) என்பவர் இங்கு வேலைசெய்து வந்தார். இந்த நிறுவனம் பாலைக்கொண்டு பால்கோவா, நெய், மில்க் ஷேக் உள்ளிட்ட பொருள்களைச் செய்துவருகிறது. வழக்கம் போல் பால்கோவா தயாரிப்பிற்காக ராமன் இன்று காலையில் தண்ணீர் பாய்லரைச் சூடாக்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அதிக அழுத்தத்தில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராமன் கொதிநீர்பட்டு உயிர் இழந்தார். ஈரோடு தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பால்கோவா தயாரிப்பு நிறுவனம் உரிய விதிகளைப் பின்பற்றியதா? விபத்திற்கான பின்னணி என்ன? என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in