துருக்கி, சிரியாவில் தாெடரும் சோகம்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்குகிறது

சிரியாவில் இடிந்து கிடக்கும் கட்டிடங்கள்
சிரியாவில் இடிந்து கிடக்கும் கட்டிடங்கள்

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆனது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் மட்டும் 4,800 கட்டிடங்கள் சேதம் அடைந்து இருக்கின்றன. இந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து இதுவரை 8,000 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளும், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகின்றன. துருக்கியில் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு மூன்று மாத காலத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார் அந்நாட்டு அதிபர்.

துருக்கியில் மீட்பு பணி தீவிரம்
துருக்கியில் மீட்பு பணி தீவிரம்

இதனிடையே சிரியாவில் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக இருப்பதால் மீட்பு பணியில் கடும் தேக்கநிலை ஏற்பட்டு இருக்கிறது. சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அங்கு மீட்பு பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதில் கடும் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. உள்நாட்டு போரால் சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சாலை வசதி சரியாக அங்கே இல்லை. பல பகுதிகள் கிளச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மருத்துவ வசதிகள், மீட்டு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிரிய மக்கள் கடும் நெருக்கடியில் தவிர்த்து வருகின்றனர். சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்திருக்கும் நிலையில் உள்நாட்டு பிரச்சினைகளால் நிவாரணப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

துருக்கியில் மீட்பு பணி தீவிரம்
துருக்கியில் மீட்பு பணி தீவிரம்

இதனிடையே துருக்கியில் மீட்புப் பணிக்காக இந்திய ராணுவம் சென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஷியாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், துருக்கியின் அடானா விமான நிலையத்திற்கு சென்றடைந்த‌து. அதில், தேடுதல் பணிக்காக மோப்ப நாய்கள், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். மேலும், ராணுவ மருத்துவமனையில் இருந்து எக்ஸ்ரே எந்திரங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக, ராணுவ மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட 89 பேர் கொண்ட மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் மீட்பு பணி தீவிரம்
துருக்கியில் மீட்பு பணி தீவிரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in