சென்னை பெண் விமானிக்கு தெலங்கானாவில் நடந்த சோகம்

சென்னை பெண் விமானிக்கு தெலங்கானாவில் நடந்த சோகம்

தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், சென்னை பெண் விமானி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் மகிமா. இவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து விமானத்தில் இன்று பயிற்சி மேற்கொண்டுள்ளார் மகிமா. விமானம் தெலங்கானா மாநிலம், நல்கொண்டா பகுதியில் விபத்தில் சிக்கியது.

வயல்வெளியில் திடீரென கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து விமானம் தீப்பிடித்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக விரைந்து சென்று விமானத்தில் இருந்தவர்களை மீட்க முயன்றுள்ளனர்.

ஆனால், கரும்புகையுடன் விமானம் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதையடுத்து, தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் விமானத்தில் சிக்கிய மகிமாவும், மற்றொரு விமானியும் உயிரிழந்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதி விமானம் கீழே விழுந்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in