திடீரென தீர்ந்த பெட்ரோல்: பைக்கை ரேஸ் செய்த போது நடந்த பரிதாபம்

திடீரென தீர்ந்த பெட்ரோல்: பைக்கை ரேஸ் செய்த போது நடந்த பரிதாபம்

சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக்கில் பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை செல்லும்வகையில் பைக்கை ரேஸ் கொடுத்தார். இதில் பின் சீட்டில் இருந்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

குமரிமாவட்டம், மாலைக்கோடு சாமவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ்ராஜ்(33). இவர் சொந்தமாகக் காய்கறிக்கடை நடத்திவருகிறார். இவர் கோவிக்கரை பிரவீன்ராஜ்(27), பிரதீப்(37) ஆகியோருடன் ஒரே பைக்கில் கழுவந்திட்டையில் இருந்து மேல்புறம் என்னும் ஊரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். பைக்கை பிரவீன் ராஜ் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென அவரது பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் வரை விரைந்து செல்ல வேண்டும் என பிரவீன் ராஜ் பைக்கை ரேஸ் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத பின் சீட்டில் இருந்த பிரின்ஸ் ராஜ் இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் அவரது பின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கேரள மாநிலம், காரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரின்ஸ் ராஜை சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்துக் குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் ரேஸ் கொடுத்ததில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in