அரசு பேருந்தில் அலைமோதிய கூட்டம்: படிக்கட்டில் பயணம் செய்த மாணவனுக்கு நடந்த துயரம்!

 உயிரிழந்த மாணவன் யுவராஜ்
உயிரிழந்த மாணவன் யுவராஜ்

சென்னை அருகே பேருந்து படிக்கட்டில் நின்றுவாறு பயணம் செய்த 11-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம், நல்லம்பாக்கம் ஊராட்சி கலைஞர் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் யுவராஜ்(14) மாம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் மாணவன் யுவராஜ் தாம்பரத்தில் இருந்து மகாபலிபுரம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அலைமோதியதால் மாணவர் யுவராஜ் படிக்கட்டில் நின்றுவாறு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேருந்து கேளம்பாக்கம் சாலை மேலக்கோட்டை அருகே சென்றபோது யுவராஜ் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த தாழம்பூர் போலீஸார் உயிரிழந்த மாணவன் யுவராஜ் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பேருந்து ஓட்டுநர், நடத்துனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in