நம்பிச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை; போலீஸில் சிக்கிய வாலிபர்: ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்

நம்பிச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை; போலீஸில் சிக்கிய வாலிபர்: ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்

பள்ளி மாணவியிடம் முகநூலில் அறிமுகமாகி பாலியல் தொல்லைக் கொடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் சோனாத்(21) இவர் கூலி வேலை செய்துவருகின்றார். இவருக்கு, ஆலங்குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் முகநூலில் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்தச் சிறுமியிடம் முகநூலில் சோனாத் மிகவும் பாசமாகப் பேசினார். இதில் அந்தச் சிறுமியும் அவரை நம்பினார்.

ஒருபக்கம் சிறுமியின் நலனில் அக்கறை கொண்டவரைப் போல் அவரிடம் பாசமாகப் பேசிக்கொண்டே, இன்னொரு புறம் சிறுமியை ஒரு தலையாகக் காதலித்து வந்திருக்கிறார் சோனாத். இந்நிலையில் நாம் முகநூலிலேயே பேசிக் கொண்டு இருக்கிறோம். முகம் பார்த்து பேச வேண்டும் என சோனாத் சொல்ல, தன் முகநூல் தோழனை நம்பி ஆலங்குளத்திற்கு சென்றார் சிறுமி. அங்கு அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற சோனாத் அவரிடம் அத்துமீறவும் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் சோனாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in