விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்: விஷப்பழத்தைச் சாப்பிட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் அட்மிட்

மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிவிளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்: விஷப்பழத்தைச் சாப்பிட்ட 12 குழந்தைகள் மருத்துவமனையில் அட்மிட்

இமாச்சலப்பிரதேசத்தில் விஷப்பழத்தை உட்கொண்ட 12 குழந்தைகள் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஊனா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட 12 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்ததால், காட்டில் உள்ள பழங்களை குழந்தைகள் உட்கொண்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 12 குழந்தைகளும் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து குழந்தை நல மருத்துவர் விகாஷ் சௌகான் கூறுகையில்," குழந்தைகளை சுகாதார நிலையத்தில் இருந்து கொண்டு வரும் போது அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. முறையான சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. அவர்கள் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார். இதுகுறித்து ஊனா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in