நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்: 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் நடந்த விபரீதம்: 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி

திருப்பூரில் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலையில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையம் மூன்றாவது மாடியில் இயங்கி வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு திருப்பூர் அடுத்த படியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் 17 வயது மகள் பயிற்சி பெற்று வந்தார். இவர் ஒரு வாலிபரைக் காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாணவியைக் காண அவரது காதலர் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது மகளை அழைத்துச் செல்ல மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்போது மகளின் காதல் விவகாரம் தெரிய வந்ததுள்ளது. இதனால் அவர் மகளைக் கண்டித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவரது மகள் பயிற்சி வகுப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குறித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலமாக அடிபட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in