அபராதம் போட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்: விதிமீறிய இளைஞர் செய்த அட்டூழியம்

போலீஸ்காரர் மீது தாக்குதல்
போலீஸ்காரர் மீது தாக்குதல்அபராதம் போட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்: விதிமீறிய இளைஞர் செய்த அட்டூழியம்

ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய வாலிபருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். இதனால் கோபம் அடைந்து போலீஸ்காரரைத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்த ரூபன்(32). இவர் ராஜபாளையம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் இவர் தலைமைக் காவலராக பணிபுரிகிறார். சங்கரன்கோவில் முக்கு சாலை பகுதியில் சாந்த ரூபன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் வாலிபர் ஒருவர் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்தி சாந்தரூபன் அபராதம் விதித்தார்.

ஆனால், அபராதம் விதிக்கக் கூடாது என சாந்தரூபனிடம் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் அந்த வாலிபர் போக்குவரத்து தலைமைக் காவலர் சாந்தரூபனைத் தாக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சாந்தரூபன் அவரை ராஜபாளையம் தெற்கு போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(26) என்பதும், அவர் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது. அவர் மீது போலீஸ்காரரைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in