கேரள அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

இடுக்கி அணை
இடுக்கி அணைஇரவு வெளிச்சத்தில்...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு மூன்று நாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை.

கேரளாவில் உள்ள அணைகளிலேயே மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது.  இது ஆசியாவின் 2வது பெரிய அணையாக கருதப்படுகிறது.  550 அடி உயரம் கொண்ட இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் அணையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பாா்வையிட கேரள அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும்

இடுக்கி அணை
இடுக்கி அணை

அதன்படிஇந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29ம் தேதி கொண்டாடப்படுகிறதுஇதையொட்டி அன்று முதல் 31-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in