அதிகாலை ரோந்தில் சிக்கிய படகு: சுருக்கு மடி வலையில் பிடித்த 1 டன் மீன்கள் பறிமுதல்

அதிகாலை ரோந்தில் சிக்கிய படகு: சுருக்கு மடி வலையில் பிடித்த 1 டன் மீன்கள் பறிமுதல்

சாயல்குடி அருகே கடலில் சுருக்கு மடி வலையில் பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்த ஒரு டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, தேவிபட்டினம்,தொண்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளில் தங்குதளம் உள்ளன. இவற்றில் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற சுழற்சி முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழிலுக்குச் செல்லும் படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய ராமேஸ்வரம், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில் கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவினர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.

அப்போது, உச்சிப்புளி அருகே சீனியப்பா தர்ஹா கடற்கரையில் தனிமையில் நின்ற நாட்டுப்படகைச் சுற்றி வளைத்தனர். அதில் ஒரு டன் மீன்கள் இருந்தன. விசாரணையில் சாயல்குடி அருகே கீழமுந்தல் மீனவர்கள் எனவும், அங்குள்ள கடலில் சுருக்கு மடி வலையில் பிடித்த மீன்களை விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிந்தது. ஒரு டன் மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், நாட்டுப்படகு மீது மேல்நடவடிக்கை எடுக்க மீன்வளத்துறை துணை இயக்குநருக்குப் பரிந்துரைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in