புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் அமைந்திருக்கும் செங்கழுநீர் அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர் இழுப்பது சிறப்பு. இந்த தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த தேரோட்டத்தை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in