காலியிடங்கள் 761, சம்பளம் மாதம் 71,900: சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

சாலை
சாலை காலியிடங்கள் 761, சம்பளம் மாதம் 71,900: சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

ரூ.71,900 வரை சம்பளத்திலான  சாலை ஆய்வாளர் பணியில் சேர விரும்புவோர் அதற்கான எழுத்துத் தேர்வுக்கு  நாளையே கடைசி நாள் என்பதால் அதற்குள்  விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்விற்கு ஜன 13 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் 11-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவது நாளை இரவுடன் நிறைவு பெறுகிறது.

காலியிடங்கள்: 761

சம்பளம்:  மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி:  அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.  ( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில்லை. ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள்  37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இதற்கு நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கெனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in /, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in