டோல்கேட் ஊழியரை பதற வைத்த லாரி டிரைவர் ! : ஹைவேயில் நடந்தது என்ன?

டோல்கேட் ஊழியரை பதற வைத்த லாரி டிரைவர் ! : ஹைவேயில் நடந்தது என்ன?

சுங்கக்கட்டணம் கட்டாமல் சென்ற லாரியைத் தடுத்து நிறுத்திய டோல்கேட் ஊழியர், அதே லாரியில் 10 கிலோ மீட்டர் தூரம் பம்பரைப் பிடித்தபடி பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கிருஷ்ணகிரி மண்டலம் அமகதாடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. அப்போது ஹரியாணாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சுங்ககட்டணம் செலுத்தாமல் வருவதாக அமகதாடு சுங்கச்சாவடிக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டோல்கேட்டிற்கு வந்த அந்த லாரியை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், லாரி நிற்காமல் அங்கிருந்து சென்றது.

இதைப் பார்த்த டோல்கேட் ஊழியர் சீனிவாசன் லாரி முன்பாக இருந்த பம்பரைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு லாரியை நிறுத்தச்சொல்லி சத்தமிட்டார். ஆனால், லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாகச் செலுத்தினார். டோல்கேட் ஊழியர் பம்பரில் தொங்கிச் செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் டூவீலர்களில் லாரியை துரத்திச் சென்றனர். இந்த காட்சியை தங்கள் செல்போனில் பலர் படம் பிடித்தனர். இந்நிலையில் காவல்துறையிடம் டோல்கேட் ஊழியர்கள் புகார் செய்தனர்.

ஆனால், அதற்குள் லாரி 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்று விட்டது. ஆனால், துரத்திச் சென்ற போலீஸார், லாரியை நிறுத்தி டோல்கேட் ஊழியர் சீனிவாசனை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

டோல்கேட் ஊழியர் லாரி பம்பரைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்த காட்சி, ஆந்திரா முழுவதும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in