கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தல தோனி: மனைவி வெளியிட்ட வீடியோ!

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தல தோனி: மனைவி வெளியிட்ட வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 41-வது பிறந்தநாளை இன்று கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை அவரது மனைவி சாக் ஷி வெளியிட்டுள்ளார்.

2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதாரண அணி வீரராக களமிறங்கிய தோனி, அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். அவரது ஹெலிகாப்டர் ஷாட் எதிரணியின் பந்துவீச்சை திணறடித்துவிடும். களமிறங்கினால் வெற்றித்தான் என்ற குறிக்கோளுடன் விளையாடக்கூடியவர் தோனி. தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் கேப்டனாக முடிசூட்டப்பட்டார். இவர் தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் 2009-ம் ஆண்டில் முதலிடத்தை பிடித்தது இந்தியா. 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை உலகக்கோப்பை போட்டிகளை நடத்திய எந்த அணியின் இதுவரை கோப்பையை வென்றது இல்லை. தோனியின் கீழ், 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது. 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டி இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த கடைசி ஐசிசி தொடர் ஆகும். இந்த தொடரை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கோப்பையை வென்றது.

90 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள தோனி 4,876 ரன்கள் எடுத்துள்ளார். 350 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்கள் குவித்துள்ள தோனி, 98 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4,978 ரன்கள் விளாசியுள்ளார். தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இப்படி சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள தல தோனிக்கு இன்று 41-வது பிறந்தநாள் ஆகும். தோனி பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவை அவரது மனைவி சாக் ஷி வெளியிட்டுள்ளார். பிறந்தநாளையொட்டி தோனிக்கு பல்வேறு தரப்பினரும், சக வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா தனது பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி. நீங்கள் எனக்கு ஒரு நண்பராகவும், சகோதரராகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களிடம் எப்போது எதுவேண்டுமானாலும் கேட்கலாம். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள் வழங்கவேண்டும். நீங்கள் ஒரு சிறந்த வீரராகவும், தலைவராகவும் இருந்ததற்கு நன்றி. ஹேப்பி பர்த் டே தோனி” எனப் பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ ட்விட்டர் பதிவில், லெஜண்ட் மற்றும் இன்ஸ்பிரேஷன் என பதிவிட்டு முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று பதிவிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பதிவில், சூப்பர் பர்த் டே டூ நம்ம தல தோனி பதிவிட்டு இருக்கிறது. சிஎஸ்கே வீரர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவும் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in