பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி

தவறினால் ரூ.1000 அபராதம்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி

‘பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் செலுத்த வேண்டும்’ என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 31) கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடைசி தேதி முடிந்த பின்னர் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும்.

அடுத்த 3 மாதங்கள் அல்லது ஜூன் 30-ம் தேதி வரை ஆதாரை இணைப்பவர்களுக்கு மட்டுமே ரூ.500 அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். அதன் பின்னர் முயற்சிப்பவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களது பான் எண் மார்ச் 31-ம் தேதி முதல் முடக்கப்படும். அபராதத்தொகையை செலுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் பயன்படுத்த முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.