அரசு கல்லூரிகளில் பி.ஜி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

அரசு கல்லூரிகளில் பி.ஜி படிப்புகளுக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு செப். 7-ம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக (செப்.16) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த செயல்பாடுகள் செப். 21-ம் தேதி தொடங்கும். எனவே, விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் www.tngasapg.in என்ற இணையதள பக்கத்தை மாணவர்கள் அணுகலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in