தமிழகத்தில் 1.05 லட்சம் பேர் விண்ணப்பம்: `நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நீட்' தேர்வு
நீட்' தேர்வுதமிழகத்தில் 1.05 லட்சம் பேர் விண்ணப்பம்: `நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (06.04.2023) கடைசி நாள் என்பதால் நீட் தேர்வு எழுத விரும்புகிறவர்கள் காலதாமதம் இல்லாமல் இன்று விண்ணப்பிக்கவும். 

இளங்கலை மருத்துவப் படிப்புக்களில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 6-ம் தேதி முதல் தேசிய தேர்வு முகமையின்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து தேர்வு கட்டணத்தையும் செலுத்தி இருந்தால் மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என்பதால் மாணவர்கள் அலட்சியம் இல்லாமல் தாமதம் இன்றி இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இதுவரை தமிழகத்தில் இருந்து 1.05 லட்சம் பேர் நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் இருந்து விடாமல் இந்த ஆண்டு கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in