பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கவனத்துக்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பொறியியல் சேர்க்கை
பொறியியல் சேர்க்கை

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க, இணைய வழி மூலம் பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணைய வழி மூலம் பதிவு செய்வது கடந்த மாதம் 5-ம் தேதி துவங்கியது.

இதுவரை 2,24,073 பேர் முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக பதிவு செய்துள்ள நிலையில், 1,80,301 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும் 1,49,737 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தினை இணைய வழியாக பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாளாகும்.

தொடர்ந்து, இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடக்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in