திடீரென மூடப்பட்டது 14 டாஸ்மாக் கடைகள்: அதிர்ச்சியில் திண்டாடும் மது பிரியர்கள்

திடீரென மூடப்பட்டது 14 டாஸ்மாக் கடைகள்: அதிர்ச்சியில் திண்டாடும் மது பிரியர்கள்

முத்துப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 14 மதுபான கடைகள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று கடலுக்கு எடுத்துச் சென்று கரைக்கப்பட உள்ளன. கடந்த காலங்களில் இங்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றபோது மத ரீதியாக சில அசம்பாவிதங்கள் நடைபெற்றன. அதனால் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளதால் நூற்றுக்கணக்கான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் உள்ள சில வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். எதிர்பாராமல் இன்று மூடப்படும் மதுக் கடைகளால் அந்தப் பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in